இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கியானது செப்டம்பர் 01 ஆம் தேதியன்று அதன் 7வது துவக்க தினத்தைக் கொண்டாடியது.
இது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று ராஞ்சி (ஜார்க்கண்ட்) மற்றும் ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) ஆகிய இடங்களில் ஒரு சோதனைத் திட்டமாகத் தொடங்கப் பட்டது.
IPPB ஆனது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
IPPB ஆனது பல்வேறு அரசாங்கத் திட்டங்களின் கீழான பயனாளிகளுக்கு நேரடிப் பலன் பரிமாற்றங்களில் (DBT) 45,000 கோடி ரூபாய்க்கு மேலான பண வழங்கீட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையானது கடந்த ஏழு ஆண்டுகளில் 161,000 அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் 1,90,000 அஞ்சல் ஊழியர்களின் விரிவான வலையமைப்பைக் கொண்டுள்ளது.