TNPSC Thervupettagam

இந்திய அரசின் LiFE முன்னெடுப்பு குறித்த சர்வதேச எரிசக்தி முகமையின் அறிக்கை

February 15 , 2023 523 days 239 0
  • சர்வதேச எரிசக்தி முகமையானது, சமீபத்தில் LiFE முன்னெடுப்பு குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்களை ஈடுபடுத்தச் செய்வதனை LiFE என்ற முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, இந்தத் திட்டத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் 440 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக சேமிக்க முடியும் என்று குறிப்பிடுகிறது.
  • வளர்ச்சி பெற்ற நாடுகளில், பணக்கார வர்க்கத்தினர்களால் வெளியிடப்படும் கரிம உமிழ்வுகள் ஏழைகளால் உருவாக்கப்பட்ட கரிம உமிழ்வை விட ஏழு மடங்கு அதிகம் ஆகும்.
  • மேம்பட்ட நாடுகளின் தனிநபர் கரிம உமிழ்வுகள் வளர்ந்து வரும் நாடுகளை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
  • உலக நாடுகளை விட இந்தியப் பொருளாதாரத்தின் செயல்திறன் 10% அதிகமாகும்.
  • தற்போது, இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மூன்றாவது பெரிய சந்தையாக உள்ளதோடு மட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சார வாகன விற்பனையானது 2021 ஆம் ஆண்டை விட 5% அதிகரித்துள்ளது.
  • தற்போது, அதிகபட்ச ஆற்றலானது வட அமெரிக்க நாடுகளில் தான் பயன்படுத்தப் படுகிறது.
  • இந்தப் பகுதியைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகள் இரண்டாவது பெரிய ஆற்றல் நுகர்வோராக திகழ்கின்றன.
  • மத்தியக் கிழக்கு நாடுகளானது மூன்றாவது பெரிய ஆற்றல் நுகர்வோராக திகழச் செய்கின்றன.
  • உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆற்றலினை ஆப்பிரிக்க நாடுகள் பயன்படுத்துகின்றன.
  • உலக ஆற்றல் பயன்பாட்டில் இந்தியா 35% பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்