TNPSC Thervupettagam

இந்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்

October 6 , 2022 655 days 425 0
  • இந்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் R.வெங்கடரமணி நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இவர் அக்டோபர் 01 ஆம் தேதி முதல் மூன்று வருடக் காலத்திற்கு இந்தப் பதவியில் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் இந்திய அரசாங்கத்தின் தலைமை சட்ட ஆலோசகர் மற்றும் நீதிமன்றங்களில் அரசின் தலைமை வழக்கறிஞர் ஆவார்.
  • அரசியலமைப்பின் 76வது சட்டப் பிரிவின் கீழ் மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் படி இந்திய குடியரசுத் தலைவரால் இவர் நியமிக்கப்படுகிறார்.
  • குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் இவர் இப்பதவியினை வகிக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்