அரசு ஊழியர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னரே தேர்தலில் போட்டியிட முடியும் என தமிழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
உயர் நீதிமன்றம் தகுதி அடிப்படையில் இந்த வழக்கு குறித்து முடிவு செய்வதைத் தவிர்த்தது.
அரசியலமைப்பின் 329(b)வது சட்டப்பிரிவானது, தேர்தல் செயல்முறையின் இடையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் நீதித் துறையானது தலையிடுவதைத் தடை செய்கிறது.
1952 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று, 329வது சட்டப்பிரிவை ஆராய்ந்து, வேட்பு மனு நிராகரிப்பு உத்தரவில் தலையிடுவதற்காக உயர் நீதிமன்றங்களோ அல்லது உச்ச நீதிமன்றமோ தங்கள் நீதிப் பேராணை அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்தது.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (RPA), 100வது பிரிவு, ஒரு வேட்பு மனுவை முறையற்ற முறையில் நிராகரிப்பதை ஒரு தேர்தலைச் செல்லாது என்று அறிவிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக பட்டியலிடுகிறது.
தேர்தலில் போட்டியிடும் உரிமை ஒரு குடிமை உரிமை அல்ல, மாறாக ஒரு சட்டம் அல்லது சிறப்புச் சட்டத்தின் ஓர் அம்சம் மட்டுமே ஆகும்.
அத்தகைய உரிமையானது, சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட முக்கிய வரம்புகளுக்கு உட் பட்டதாகவே இருக்க வேண்டும்.