அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்திய அரசுடன் குறைக்கடத்தி ஒப்பந்தத்தினை மேற்கொண்ட இரண்டாவது குவாட் அமைப்பின் நாடாக ஜப்பான் மாறியுள்ளது.
குறைக்கடத்தி உற்பத்திச் சூழலின் கூட்டு மேம்பாட்டிற்காகவும், அதன் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் நிகிழ்திறனை மேலாண்மை செய்வதற்காகவும் என்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சுமார் 100 குறைக்கடத்தி உற்பத்தி ஆலைகளைக் கொண்ட ஜப்பான் சிறந்த குறைக் கடத்தி உற்பத்திச் சூழல் அமைப்பைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகும்.
குறைக்கடத்தித் தொழில்துறையானது தற்போதுள்ள 650 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்து 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தொழில் துறையாக மாற உள்ளது.