TNPSC Thervupettagam

இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர் சங்கத்தின் தலைவர் - ரகுராம்

November 21 , 2018 2115 days 541 0
  • புகழ்பெற்ற மார்பகப் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை நிபுணரும், KIMS உஷாலட்சுமி மார்பக நோய்களுக்கான மையத்தின் இயக்குநருமான ரகுராம் இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்.
  • இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த தாமோனஸ் சௌத்ரி என்பவரைத் தோற்கடித்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார்.
  • இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர் சங்கத்தின் தலைமையகமான சென்னையில் இத்தேர்தலுக்கு தலைமை தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட திரு. அரவிந்த் குமார் என்பவரால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
  • ரகுராம் பத்மஸ்ரீ விருது மற்றும் B.C. ராய் தேசிய விருது ஆகியவற்றை வென்றவர் ஆவார்.
  • இந்தியாவில் அறுவைச் சிகிச்சைக்கான குரலாக கருதப்படும் இந்திய அறுவைச் சிகிச்சைக்கான நிபுணர்கள் சங்கம், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்கமாகும்.
  • உலகத்தின் மிகப்பெரிய அறுவைச் சிகிச்சைக்கான நிபுணர் சங்கம் அமெரிக்க அறுவைச் சிகிச்சைக்கான நிபுணர்களின் கல்லூரி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்