இந்திய ஆயுதப் படைகளின் கொடி தினமானது 1949 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
நாட்டைப் பாதுகாக்க எல்லைகளில் போராடும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள், விமான வீரர்கள் மற்றும் கடற்படை வீரர்களை கௌரவிப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
இந்திய ஆயுதப் படைகளின் கொடி தினத்தின் போது, போரின் போது உயிரிழந்த கணவர்களின் மனைவிகள் (விதவைகள்), தியாகிகளின் குழந்தைகள், போரின் போது ஊனமடைந்த வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோரின் நலனுக்காக நிதி சேகரிக்கப் படுகின்றது.
ஆயுதப் படை வீரர்களின் நலனுக்காக ஆயுதப் படைகளின் கொடி தின நிதி (Armed Forces Flag Day Fund - AFFDF) பயன்படுத்தப் படுகின்றது.