TNPSC Thervupettagam

இந்திய இணையவழிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (I4C)

January 13 , 2020 1780 days 605 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது இந்திய இணையவழிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre - I4C) மற்றும் தேசிய இணையவழிக் குற்றங்கள் என்ற இணைய தளம் ஆகியவற்றினைத் தொடங்கி வைத்துள்ளது.
  • இந்த I4C மையமானது புது தில்லியில் அமைந்துள்ளது.
  • இது மத்திய உள்துறை அமைச்சகத்தினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையம் மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவின் கீழ் அமைக்கப்பட உள்ளது.
  • தேசிய இணையவழிக் குற்றங்கள் அறிக்கையிடல் வலைதளமானது இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக குடிமக்கள் நிகழ்நேரத்தில் அல்லது ஆன்லைனில் புகாரளிக்க உதவுகின்றது.
  • மத்திய அரசானது I4C மட்டுமல்லாது தேசியத் தகவல் மையம் – கணினி சார்ந்த அவசரக் கால பதிலெதிர்ப்புக் குழு (National Informatics Centre-Computer Emergency Response Team - NIC-CERT) ஆகியவற்றையும் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்