இந்திய இரயில்வே கெய்ல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 1 , 2018 2282 days 666 0
கெய்ல் (இந்தியா) நிறுவனமானது, விநியோகிப்பாளரின் பட்டறைகள், உற்பத்தித் தளங்கள், கிடங்குகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு, இயற்கை எரிவாயுவை விநியோகிப்பதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக, இந்திய இரயில்வேயுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டுள்ளது.
இது, உட்கட்டமைப்பை உருவாக்கவும், தொழில்துறை மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்காக, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG), குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போன்றவற்றை விநியோகிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த உடன்படிக்கையானது, தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் வாயுக்களான அசிட்டிலின் கரைசல், திரவ இயற்கை எரிவாயு (LPG), பாரத் உலோகவெட்டு எரிவாயு, உலை எண்ணெய் மற்றும் அதிவேக டீசல் எனப்படும் ஹை-ஸ்பீடு டீசல் போன்றவற்றின் மாற்றாக இயற்கை எரிவாயுவை உபயோகிக்க உதவும்.