இந்திய இரயில்வே நிர்வாகத்தின் சரக்குப் போக்குவரத்து 2024-25
March 19 , 2025 16 days 63 0
இந்திய இரயில்வே நிர்வாகத்தின் சரக்குப் போக்குவரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது பதிவாகியுள்ளது என்பதோடு 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சரக்குப் போக்குவரத்தானது சுமார் 1,465.371 மில்லியன் டன்களை (MT) எட்டியுள்ளது.
இந்த எண்ணிக்கையானது, ஏற்கனவே 2023-24 ஆம் ஆண்டில் பதிவான 1,443.166 MT என்ற முழு ஆண்டு சரக்குப் போக்குவரத்து அளவினை விஞ்சியுள்ளது.
இந்தத் தேசிய அளவிலான நிறுவனம் ஆனது, 2027 ஆம் ஆண்டிற்குள் 3,000 MT என்ற சரக்குப் போக்குவரத்து இலக்கினை அடைய வேண்டும் என்ற இலட்சிய மிகு இலக்கை நிர்ணயித்துள்ளது.