தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD – Rajiv Gandhi National Institute of Youth Development) 2017- ஆம் ஆண்டிற்கான இந்திய இளைஞர் மேம்பாட்டு குறியீடு மற்றும் திட்ட அறிக்கையை (Youth Development under and Report 2017) தயார் செய்துள்ளது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் இதனை வெளியிட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டிற்கான இந்திய இளைஞர் மேம்பாட்டுக் குறியீடு தயாரிப்பின் நோக்கம் நாடு முழுவதும் இளைஞர்கள் மேம்பாட்டின் போக்கை கண்காணித்தல் என்பதாகும்.
சர்வதேச இளைஞர் மேம்பாட்டு அறிக்கைகளோடு (Young Development Index) ஒத்திசையும் வகையில், இந்திய தேசிய இளையோர் கொள்கை (National Youth Policy – 2014) மற்றும் காமன்வெல்த் நாடுகளின் உலக இளைஞர் மேம்பாட்டு அறிக்கை போன்றவற்றில் அளிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் என்பதற்கான புதிய பொருள் விளக்கத்தைக் அடிப்படையாகக் கொண்டு இந்தக் குறியீடு தயாரிக்கப்படுகிறது.
2014 தேசிய இளையோர் கொள்கை மற்றும் காமன்வெல்த் நாடுகளின் உலக இளையோர் மேம்பாட்டு அறிக்கையின்படி 15 வயது முதல் 29 வயது வரையிலான வயதுடையவர்கள் இளைஞர்களாவர்.
இந்திய மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர் இளைஞர்களாவர்.
உலக இளைஞர் மேம்பாட்டு குறியீடு (YDI – Young Development Index) உலகம் முழுவதும் 183 நாடுகளில் உள்ள இளைஞர்களின் நிலையை அளவிட்டு காமன்வெல்த் செயலகத்தால் (Common Wealth Secreteriate) வெளியிடப்படுகிறது.
2016-ஆம் ஆண்டிற்கான உலக இளைஞர் மேம்பாட்டு குறியீட்டில், 183 நாடுகளில் இந்தியா 133-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கல்வி, ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வு, வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகள், அரசியல் ஈடுபாடு மற்றும் இளையோர்களுக்கான குடிமக்கள் பங்கெடுப்பு, சமூக உள்ளடக்கம் போன்ற பல பரிமாண காரணிகளின் அடிப்படையில் இந்திய இளைஞர் குறியீடு கணக்கிடப்படுகிறது.