இந்திய உணவுக் கழகம் - 60வது ஆண்டு விழா
January 18 , 2024
316 days
400
- இந்திய உணவுக் கழகம் ஆனது ஜனவரி 14 ஆம் தேதியன்று தனது 60வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
- இந்திய உணவுக் கழகம் (FCI) என்பது 1964 ஆம் ஆண்டு உணவுக் கழகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
- இந்திய உணவுக் கழகம் ஆனது 1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று அதன் முதல் மாவட்ட அலுவலகம் தஞ்சாவூரிலும், அதன் தலைமையகம் சென்னையிலும் அமைக்கப் பட்டது.
- தற்போது, இது ஆசியாவின் மிகப்பெரிய விநியோகச் சங்கிலி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும்.
- 2022-23 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் 76.56 மில்லியன் டன் நெல் மற்றும் 26.2 மில்லியன் டன் கோதுமையைக் கொள்முதல் செய்தது.
Post Views:
400