TNPSC Thervupettagam

இந்திய உணவுக் கழகம் - 60வது ஆண்டு விழா

January 18 , 2024 184 days 304 0
  • இந்திய உணவுக் கழகம் ஆனது ஜனவரி 14 ஆம் தேதியன்று தனது 60வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
  • இந்திய உணவுக் கழகம் (FCI) என்பது 1964 ஆம் ஆண்டு உணவுக் கழகச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இந்திய உணவுக் கழகம் ஆனது 1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று அதன் முதல் மாவட்ட அலுவலகம் தஞ்சாவூரிலும், அதன் தலைமையகம் சென்னையிலும் அமைக்கப் பட்டது.
  • தற்போது, இது ஆசியாவின் மிகப்பெரிய விநியோகச் சங்கிலி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் 76.56 மில்லியன் டன் நெல் மற்றும் 26.2 மில்லியன் டன் கோதுமையைக் கொள்முதல் செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்