TNPSC Thervupettagam

இந்திய உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க விருதுகள் 2021

May 27 , 2021 1156 days 573 0
  • 2021 ஆம் ஆண்டின் இந்திய உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க  விருதுகள் மே 22 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட சர்வதேச உயிரிப் பல்லுயிர்ப்பெருக்கத் தினத்தன்று வழங்கப் பட்டன.
  • உயிரி வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல்” எனும் பிரிவின் கீழ் கிருஷி அவம் பரிஷ்டிகி விகாஸ் சன்ஸ்தான் (KRAPAVIS - Krishi Avam Paristhitiki Vikas Sansthan) எனும் அமைப்பிற்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கேரளாவில்கிழங்குப் பயிர்களின் நாயகன்என அழைக்கப்படுகின்ற N.M. சாஜி அவர்களுக்குஉள்நாட்டு உயிரினங்களைப் பாதுகாத்தல்எனும் தனிப்பிரிவில் ஒரு  விருது வழங்கப் பட்டுள்ளது.
  • நாகலாந்திலுள்ள கோனோமா இயற்கை வளங்காப்பு மற்றும் டிராகோபன் சரணாலயம் உயிரிவளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல்எனும் பிரிவின் கீழ் ஒரு விருதினை வென்றுள்ளது.
  • இந்தியா உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க விருதுகளுக்கான முன்னெடுப்பானது 2012 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், தேசிய உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றால் இணைந்து தொடங்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்