அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான சிங்சுங் புகன் சமூக காப்புக் காட்டிற்கு (Singchung Bugun Community Reserve - SBVCR) வனவிலங்கு இனங்களின் பாதுகாப்பு’ என்ற பிரிவின்கீழ் 2018 ஆம் ஆண்டிற்கான இந்திய உயிர் பல்வகைமை விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதானது, இந்நிறுவனத்திற்கு, அரிதான மற்றும் உயர் அச்சுறுதல் நிலையில் (Critically Endangered) உள்ள பறவையான புகுன் லியோசிச்லாவை (Bugun Liocichla) பாதுகாப்பதற்கு எடுத்த முயற்சிகளுக்காக வழங்கப்பட்டது.
இந்த விருதானது பின்வருவனவற்றின் கூட்டு முயற்சியாகும்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் (Ministry of Environment, Forest and Climate Change - MoEFCC)
தேசிய உயிர்பல்வகைமை ஆணையம் (National Biodiversity Authority - NBA)
ஐ.நா.வின் மேம்பாட்டுத்திட்டம் (United Nations Development Programme - UNDP)
இந்தப் பறவையானது ஒரு புதிய பறவையாக 2006 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. 1947லிருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே புதிய பறவையினம் இதுவே ஆகும்.
இப்பறவைகளை காப்பதற்கு புகுன் பழங்குடியினர் எடுத்த முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இப்பறவை இனத்திற்கு புகுன் லியோசிச்லா என்று பெயர் சூட்டப்பட்டது.