TNPSC Thervupettagam

இந்திய கருப்பு நிறத் தேனீ

November 17 , 2022 612 days 330 0
  • மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை தேனீ இனம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
  • இந்தப் புதிய இனத்திற்கு ஏபிஸ் கரிஞ்சோடியன் என்று பெயரிடப்பட்டு, இந்திய கருப்பு நிறத் தேனீ என்ற பொதுப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
  • 200 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஒரு புதிய வகை தேனீ இனம் கண்டறியப்பட்டுள்ளது.
  • 1798 ஆம் ஆண்டில் ஃபேப்ரிசியஸ் என்பவரால் இந்தியாவில் பகுதியில் கண்டறியப் பட்டதாக குறிப்பிடப்பட்ட கடைசி தேனீ அபிஸ் இண்டிகா ஆகும்.
  • ஃபேப்ரிசியஸ் இந்தியத் தேனீக்கு அபிஸ் இண்டிகா என்று பெயரிட்டாலும், அது இது வரை இந்தியாவினைச் சேர்ந்த இனமாக கருதப்படவில்லை.
  • 'ரேடியோ-இடைநிலை குறியீடு (RMI)’ எனப்படும் தேனீ வகைகளில் நிலவும் இனப் பாகுபாட்டிற்கான ஒரு புதிய நடவடிக்கையின் அடிப்படையில் ஆய்வுக் குழு அபிஸ் இண்டிகாவின் நிலையை விவரித்து மீண்டும் குறிப்பிட்டது.
  • இன்று வரை, மத்திய மற்றும் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் சமவெளிகளில் அபிஸ் செரானா என்ற ஒரு இனம் மட்டுமே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய கண்டுபிடிப்பானது உலகில் உள்ள தேனீக்களின் இனத்தை 11 ஆக உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்