TNPSC Thervupettagam

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் - புதிய தலைவர்

May 4 , 2018 2299 days 1325 0
  • 1981-ஆம் ஆண்டின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் முன்னாள் கர்நாடக தலைமைச் செயலாளரான சுபாஷ் சந்திர குந்தியா (Subhash Chandra Khuntia) இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India-IRDAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நியமனங்களுக்கான கேபினேட் குழுவானது (Appointments Committee of the Cabinet -ACC) இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக, 3 ஆண்டுகள் பதவிக் காலத்திற்கு சுபாஷ் சந்திர குந்தியாவின் நியமனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
  • IRDAI-அமைப்பின் தலைவராக இருந்தS விஜயன் அவர்களின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி முடிவடைந்ததால் இப்பதவியானது இரு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருந்து வந்தது.
  • இந்தியாவில் காப்பீட்டு தொழில்துறையை ஒழுங்குமுறைப்படுத்துகின்ற மற்றும் மேம்படுத்துகின்ற ஓர் உச்ச சட்ட அமைப்பே (apex statutory body) இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகும்.
  • 1999-ஆம் ஆண்டின் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டத்தின் (Insurance Regulatory and Development Authority Act, 1999) கூறுகளின் படி இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்