- நாட்டின் 69-வது குடியரசுத் தினம் ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக, நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான ஜனவரி 26, 1950ஆம் தேதி இந்தியாவின் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகின்றது.
- நாட்டில் முதல் முறையாக இவ்வாண்டு குடியரசுத் தின நிகழ்ச்சிகளுக்கு ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 10 தலைவர்கள் சிறப்பு விருந்தினராகக கலந்துக் கொண்டனர்.
- ஆசியான் அமைப்பு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளும், ஆசியான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான கூட்டுறவு 25 ஆண்டுகளும் நிறைவுற்றிருக்கும் இவ்வேளையில், இந்தியக் குடியரசு தின விழாவில் ஆசியான் அமைப்பினுடைய அனைத்து நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றிருப்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
- முழு சுயராஜ்ஜிய முழக்கத்தின் (Purna Suraj Diwas) ஆண்டு நிறைவோடு ஒருங்கிணையும் வகையில் முக்கியத்துவமளித்தது தேர்வு செய்யப்பட்ட நாளான 1950 ஆண்டின் ஜனவரி 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
- மேலும் ஜனவரி 26, 1950-ல் தான் இந்திய சுதந்திரச் சட்டம் (Indian Independece Act) நீக்கப்பட்டது. மேலும் இந்த நாளில் தான் பிரிட்டிஷ் பேரரசின் ஓர் டொமினியானாக இல்லாமல் இந்தியாவானது ஓர் ஜனநாயக குடியரசு நாடாக உருவாக்கப்பட்டது (Democratic Republic) .
- 1930ஆம் ஆண்டு ஜனவரி 26ல் தான் பூர்ண சுயராஜ்ய திவாஸ் அல்லது காலணிய ஏகாதிபத்தியத்திலிருந்து நாடு முழு விடுதலை அடைந்திட வேண்டும் என்ற தீர்மானம் இந்திய தேசிய காங்கிரஸரால் நிறைவேற்றப்பட்டது.
ஆசியானைச் சேர்ந்த 10 நாடுகளாவன
- தாய்லாந்து
- வியட்நாம்
- இந்தோனேசியா
- மலேசியா
- பிலிப்பைன்ஸ்
- சிங்கப்பூர்
- மியான்மர்
- கம்போடியா
- லாவோஸ்
- புருனே.