இந்திய ஒலிம்பிக் சங்கமானது (Indian Olympic Association – IOA) இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை (BFI – Boning federation of India) இந்தியாவின் தேசிய குத்துச்சண்டை அமைப்பு என அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவில் குத்துச் சண்டைக்கான தேசிய அமைப்பாக இருந்த இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை சம்மேளனத்தை இந்திய விளையாட்டு அமைச்சகம் தடை செய்தததை அடுத்து BFI தற்போது தேசிய அமைப்பாக செயல்பட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA – International Boning Association) அங்கீகாரத்தை BFI பெற்றதை அடுத்து மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும் IOA தங்களது அங்கீகாரத்தை BFI க்கு வழங்கியுள்ளன.