4 நாட்கள் அளவிலான 9வது இந்திய சர்வதேச அறிவியல் விழா (IISF-2023) ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் இந்தியாவின் முக்கிய சாதனைகளைக் கொண்டாடவதே இந்த அறிவியல் திருவிழாவின் நோக்கமாகும்.
அறிவியல் ஆர்வலர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதும், இளம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும், இந்தியக் குடிமக்கள் மத்தியில் அதைப் பரப்புவதும் இந்த விழாவின் நோக்கமாகும்.
2023 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் மையக் கருத்துரு, “அமிர்த காலத்தில் பொதுமக்களை சென்றடையும் வகையிலான அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்” என்பதாகும்.