TNPSC Thervupettagam

இந்திய-சிங்கப்பூர் திட்டத்தின் இரண்டாம் கட்டம்

April 25 , 2024 213 days 318 0
  • தமிழ்நாடு பொது சுகாதாரம் (DPH) மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை ஆனது சிங்கப்பூர் சுகாதார சேவைகள் மற்றும் சிங்கப்பூர் சர்வதேச அறக்கட்டளை (SIF) உடன் ஒத்துழைப்பினை மேற்கொண்டுள்ளது.
  • இது ஒருங்கிணைந்த மகப்பேறியல் உயிர்ப்பித்தல் அவசரநிலைகள் மற்றும் தாய் மற்றும் சேய் சுகாதார (EMCH) சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் ஆனது நிறைவடைந்து, இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
  • இதன் விளைவாக, கோவிட்-19 பெருந்தொற்றுகளின் போது 90 ஆக உயர்ந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் ஆனது, 2022-2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளுக்கு சுமார் 52 ஆக தமிழ்நாட்டின் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் குறைந்தது.
  • இரண்டாம் கட்டம் மேற்கொள்ளப்பட உள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த EMCH திட்டமானது தமிழ்நாட்டில் உள்ள 140க்கும் மேற்பட்ட தாய் மற்றும் சேய் நல (MCH) நிபுணர்களுக்குப் பயிற்சி அளிக்கும்.
  • முதல் கட்டத்தின் போது, மாநிலத்தில் 1,000க்கும் மேற்பட்ட உள்ளூர் தாய் மற்றும் சேய் நல (MCH) நிபுணர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்