TNPSC Thervupettagam

இந்திய சீரம் நிறுவனம் - CEPI கூட்டாண்மை

February 8 , 2024 161 days 321 0
  • இந்திய சீரம் நிறுவனம் (SII) ஆனது, உலகளாவியத் தெற்கு நாடுகளில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ந்து வரும் பெருந்தொற்றிற்கான தயார்நிலைப் புத்தாக்கங்களுக்கான கூட்டணியில் சேர உள்ளது.
  • இது எதிர்காலத்தில் தோன்ற உள்ள பெருந்தொற்றுகளுக்கு விரைவான, திறம் மிக்க மற்றும் உரித்தான நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெருந்தொற்றிற்கான தயார்நிலை புத்தாக்கங்களுக்கான கூட்டணி (CEPI) என்பது பெருந்தொற்று மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பரவும் பெருந்தொற்று அச்சுறுத்தல்களுக்கு எதிராக தடுப்பூசிகள் மற்றும் பிற உயிரியல் சார்ந்த எதிர் நடவடிக்கைகளின் உருவாக்கத்தினை விரைவுபடுத்தும் ஒரு புதுமையான உலகளாவியக் கூட்டாண்மை ஆகும்.
  • CEPI அமைப்பானது, தடுப்பூசிகள் ஆனது சரியான நேரத்தில், ஒரு பெருந்தொற்று ஏற்படுத்தக் கூடிய நோய்க்கிருமியை அடையாளம் கண்ட 100 நாட்களுக்குள் ஆரம்ப அங்கீகாரம் மற்றும் உற்பத்திக்கு தயாராக இருக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது.
  • இந்தக் கூட்டணியானது, உலகளாவியத் தென் பிராந்தியங்களில் தடுப்பூசி தயாரிப்பு முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமாக இருக்கும் என்பதோடு மேலும் 100 நாட்கள் நடவடிக்கை இலக்கினை அடைவதற்கு அதனை ஒரு படி முன்னோக்கிக் கொண்டுச் செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்