சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் சுறாமீன் வல்லுநர் குழுவானது இந்தியப் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் (Exclusive Economic Zone - EEZ) சுறா மீன்கள், மீன் துடுப்புக் கதிர்கள் மற்றும் சிம்மேராஸ் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
இந்த ஆய்வானது இந்திய EEZ பகுதியிலிருக்கும் சுறா மீன்கள், மீன் துடுப்புக் கதிர்கள் சிம்மேராஸ் ஆகிய 170 மீன் இனங்களில் 19 இனங்களை ”மிகவும் அருகி வரும் இனங்களாக” (Critically Endangered - CE)வகைப்படுத்தி இருக்கின்றது.
இது முதன்முறையாக இந்தியப் பெருகு சுறா சிபாலோஸ்கிலியம் சிலாசி என்ற ஒரு இனத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட புவியியல் வரம்பு மற்றும் எண்ணிக்கை குறைவு ஆகியவற்றின் காரணமாக ”CE” என வகைப்படுத்தி இருக்கின்றது.
இந்தியப் பெருகு சுறாமீன் என்பது கேரளா, இலங்கை மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றின் கடற்கரைகளில் காணப்படும் ஒரு ஆழ்கடல் பூனை வகை சுறா மீனாகும்.
கடல் வெள்ளை நுனி சுறாமீன் ஆனது அருகி வரும் இனமாக முன்பு வகைப்படுத்தப் பட்டு இருந்தது. இது தற்பொழுது ”மிகவும் அருகி வரும் உயிரினமாக” வகைப்படுத்தப் பட்டுள்ளது.