TNPSC Thervupettagam

இந்திய சுற்றுச்சூழல் அறிக்கை 2019

June 10 , 2019 1997 days 783 0
  • சுற்றுச்சூழல் புள்ளி விவரங்கள் மற்றும் பகுப்பாய்வுகளைக் கொண்ட வருடாந்திர அளவீட்டு அறிக்கையான இந்திய சுற்றுச்சூழல் 2019 அறிக்கையானது என்பது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மைய உதவியுடன் வெளியிடப்படும் Down To Earth என்ற பத்திரிக்கையால் தொகுக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய கண்டுபிடிப்புகள்
  • இந்தியாவின் மொத்த இறப்புகளில் 12.5 சதவீத இறப்பிற்குக் காற்று மாசுபாடு காரணமாகும்.
  • 2030 ஆம் ஆண்டின் ஐநாவின் நீடித்த வளர்ச்சி இலக்கினை அடைவதற்கு, காலநிலை மாற்ற ஆயத்தப் பணிகளை கண்காணிக்கும் குறியீடுகளை இந்தியா இதுவரை கண்டறியவில்லை.
  • நாட்டில் உள்ள நிலப்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் இரண்டுமே மிகவும் குறைவாக உள்ளது. 86 நீர்நிலைகள் மிகக் கடுமையாக மாசுபட்டுள்ளன.
  • 24 x 7 பொது சுகாதார மையங்களின் எண்ணிக்கையானது 35 சதவீதம் குறைவாக உள்ளது. மேலும் 26 சதவீத மருத்துவ அலுவலர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 2050 ஆம் ஆண்டளவில் உலகின் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் எண்ணிக்கையில் 416 மில்லியன் மக்களை இந்தியா இணைக்கும் எனவும் உலகளாவிய மக்கள் தொகையில் 58 சதவீதத்திற்குத் தாயகமாக இந்தியா இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
  • 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கிடையே இந்தியாவின் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வானது 22% சதவீதம் அதிகரித்துள்ளது.
  • சமீபத்தில் இந்தியாவானது சக்தி வாய்ந்த காட்டுத்தீ கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பிற்கு மாறியுள்ளது. (SWPP–VIIRS) இதன் மூலம் சிறந்த துல்லியத் தன்மையுடனும் நுட்பமாகவும் காட்டுத் தீயைக் கண்டறிய இயலும்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் வேலையின்மை விகிதமானது, 1.9 மடங்கு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்