TNPSC Thervupettagam

இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம்

January 28 , 2018 2365 days 1096 0
  • மத்திய உள்துறை அமைச்சகமானது இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையத்தை ( Indian Cyber Crime Coordination Centre - I4C) புது தில்லியில் அமைக்க திட்டமிட்டுள்ளது.
  • நிதி மோசடிகள், இணையதளத்தில் இனவாத, வகுப்புவாத மற்றும் ஆபாச உள்ளடக்கங்களை (Communal and pornographic content) பரப்புதல் போன்ற பல்வேறு  சைபர் குற்றங்களை இந்த மையம் கையாளும்.
  • பல்வேறு சைபர் குற்றங்களுடைய வழக்குகளின் விசாரணையின் போது வெளிப்படும்   சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் குற்றங்களுடைய  வழிநடத்திகளின்   விவரங்கள்  அடங்கிய  பட்டியலை இம்மையம் தயாரித்து பராமரிக்கும்.
  • சைபர் குற்றங்களை தடுப்பதற்காக, இந்த விவரப் பட்டியலானது  பாதுகாக்கப்பட்ட உட்பிணையங்களின் (Secured internal Network) வழியே பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே போன்ற பணிமுறையைக் கொண்ட மையங்களை உருவாக்க மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
  • மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை அதிகாரிகளுக்கு சைபர் தடயவியல் பயிற்சி ஆய்வகத்தோடு கூடிய பயிற்சி மையத்தை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நிதி உதவியையும்  (Cyber Forensic Training laboratory-Cum-training Centre) வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்