சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவானது இந்திய நாகத்தின் மரபணுக்களை வரிசைப் படுத்தியுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் பாம்புக்கடிச் சிகிச்சையில் முக்கியமானயாகக் கருதப்படுகின்ற 19 முக்கிய நச்சுத் தன்மை கொண்ட மரபணுக்களை இந்திய நாகத்தின் மரபணுவில் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த மரபணு வரிசையின் மூலம் பயனுள்ள எதிர்ப்பு விஷத்தை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளைப் பெற முடியும்.
இந்தியாவில், கீழ்க்கண்ட நான்கு பெரிய பாம்பு இனங்கள் எதிர்ப்பு விஷத்தை உருவாக்குவதற்கான சவாலை உண்டாக்குகின்றன. அவையாவன
இந்திய நாகம் (நஜா நஜா),
நல்ல பாம்பு (புங்கரஸ் கெருலியஸ்),
ரஸ்ஸலின் கட்டு விரியன் (டபோயா ரஸ்ஸெலி), மற்றும்
சுருட்டை விரியன் (எச்சிஸ் கரினாட்டஸ்).
இந்த 4 இனங்கள் வடகிழக்கு இந்தியாவில் காணப்படுவதில்லை. ஆனால் இப்பகுதியில் கணிசமான எண்ணிக்கையிலான பாம்புக்கடிகள் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவானது உலகின் பாம்புக் கடி தலைநகரமாகக் கருதப் படுகின்றது.
இந்தப் பெரிய, 4 வகையான பாம்பு இனங்கள் காரணமாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 50,000 இறப்புகள் நிகழ்கின்றன.