TNPSC Thervupettagam

இந்திய நாகத்தின் மரபணு

January 19 , 2020 1645 days 584 0
  • சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவானது இந்திய நாகத்தின் மரபணுக்களை வரிசைப் படுத்தியுள்ளது.
  • ஆராய்ச்சியாளர்கள் பாம்புக்கடிச் சிகிச்சையில் முக்கியமானயாகக் கருதப்படுகின்ற 19 முக்கிய நச்சுத் தன்மை கொண்ட மரபணுக்களை இந்திய நாகத்தின் மரபணுவில் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த மரபணு வரிசையின் மூலம் பயனுள்ள எதிர்ப்பு விஷத்தை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளைப் பெற முடியும்.
  • இந்தியாவில், கீழ்க்கண்ட நான்கு பெரிய பாம்பு இனங்கள் எதிர்ப்பு விஷத்தை உருவாக்குவதற்கான சவாலை உண்டாக்குகின்றன. அவையாவன
    • இந்திய நாகம் (நஜா நஜா),
    • நல்ல பாம்பு (புங்கரஸ் கெருலியஸ்),
    • ரஸ்ஸலின் கட்டு விரியன் (டபோயா ரஸ்ஸெலி), மற்றும்
    • சுருட்டை விரியன் (எச்சிஸ் கரினாட்டஸ்).
  • இந்த 4 இனங்கள் வடகிழக்கு இந்தியாவில் காணப்படுவதில்லை. ஆனால் இப்பகுதியில் கணிசமான எண்ணிக்கையிலான பாம்புக்கடிகள் ஏற்பட்டதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவானது உலகின் பாம்புக் கடி தலைநகரமாகக் கருதப் படுகின்றது.
  • இந்தப் பெரிய, 4 வகையான பாம்பு இனங்கள் காரணமாக இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 50,000 இறப்புகள் நிகழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்