TNPSC Thervupettagam

இந்திய நாட்டின் முதல் சர்வதேச கால்பந்தாட்ட கோல்

October 15 , 2017 2657 days 1016 0
  • ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜீக்சன் சிங் இந்தியா சார்பில் ஒரு கோல் அடித்தார்.
  • பிபா கால்பந்தாட்ட வரலாற்றில் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட முதல் கோல் இதுவாகும்.டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தியாவுக்கான போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இந்த கோல் பதிவு செய்யப்பட்டது.
  • கொலம்பியா நாட்டிற்கு எதிரான ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் இந்த கோலினை ஜீக்சன் சிங் அடித்து சாதனைப் புரிந்தார். இந்தியா ஆட்டநேர முடிவில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.
  • ஜீக்சன் மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த கால்பந்தாட்ட வீரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்