TNPSC Thervupettagam

இந்திய நிதி அமைப்பின் நிலைத்தன்மை குறித்த மதிப்பீடு 2025

March 12 , 2025 19 days 69 0
  • “இந்திய நிதி அமைப்பின் நிலைத் தன்மை மதிப்பீடு” என்ற தலைப்பிலான இந்த ஒரு அறிக்கையானது சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
  • மின்சாரத் துறை கடன்களில் சுமார் 63% ஆனது, 2024 ஆம் நிதியாண்டில் ஒரு வகை NBFC நிறுவனங்களாக இருந்த மூன்று பெரிய உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களில் இருந்து மட்டுமே பெறப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • இது 2019-20 ஆம் ஆண்டில் 55% ஆக இருந்தது.
  • மேலும், அவற்றின் கடன்களில் சுமார் 56% ஆனது, சந்தை சார் செயற்கருவிகள் மூலம் நிதியளிக்கப் பட்டது என்ற நிலையில் மீதமுள்ளவை மட்டுமே வங்கி கடன்கள் மூலம் நிதியளிக்கப் பட்டு ள்ளன.
  • பொதுத்துறை வங்கிகள் (PSB) சுமார் 9% மட்டுமே மூலதன நிறைவு விகிதத்தை (CAR) பேணுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடுகின்றது.
  • CAR என்பது இடர் உண்டாகும் சொத்துகள் மீதான மூலதன விகிதமாகும் என்பதோடு இது வங்கியின் இழப்பு ஏற்புத் திறனை அளவிட பயன்படுகிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, PSB மற்றும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கு என முறையே 12% மற்றும் 9% CAR விகிதத்தினைக் கட்டாயமாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்