முதலாவது இந்திய நிதி அறிக்கையானது, இந்திய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பான மேம்பட்ட நிதி ஆராய்ச்சி மற்றும் கற்றல் மையத்தினால் (CAFRAL) வெளியிடப்பட்டுள்ளது.
9,666 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFIs) பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிக வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அதாவது வங்கி சாரா நிதி நிறுவனங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் ஆனது 8.6 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதே காலகட்டத்தில் வங்கிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் ஆனது 59.1 சதவீதத்திலிருந்து 51.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2019-2020 ஆம் ஆண்டில் 22.9 சதவீதமாக இருந்த இடர் உண்டாக்கும் சொத்துகள் மீதான மூலதனம் (CRAR) ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 27.6 சதவீதமாக உயர்ந்ததன் மூலம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
அதே போல், மொத்த மற்றும் நிகர வாராக் கடன் (NPA) விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியானது, வைப்புத் தொகை கோரும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஊக்கப்படுத்தாததால், 2002 ஆம் ஆண்டில் 784 ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை தற்போது 49 ஆக குறைந்துள்ளது.