வருடத்திற்கு இருமுறை ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் நிதிநிலைத் தன்மை அறிக்கையின் (Fiscal Stability Report-FSR) 2018 ஆம் ஆண்டிற்கான 18-வது வெளியீட்டை சமீபத்தில் RBI வெளியிட்டுள்ளது.
இந்த FSR ஆனது நிதிநிலைத் தன்மைக்கான அபாயங்கள் மற்றும் நிதி அமைப்பின் தாங்குதிறன் ஆகியவற்றின் மீதான நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவினுடைய துணைக் குழுவின் கூட்டு மதிப்பீட்டைப் பிரதிபலிக்கிறது.
உர்ஜித் படேலின் பதவி விலகலைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் சக்திகாந்த தாஸ் RBI-ன் ஆளுநராக பொறுப்பேற்ற பின் வெளியிடப்படும் முதல் அறிக்கை இதுவேயாகும்.
முக்கிய குறிப்புகள்
பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக் கடன்களின் விகிதமானது (Gross Non-Performing Assets -GNPA) 2015 மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக அரை வருட வீழ்ச்சியினை அடைந்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 11.5% ஆக இருந்த பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் நிகர வாராக் கடன்களின் விகிதமானது 2018 செப்டம்பரில் 10.8% ஆக குறைந்துள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட நிலையான முன்னேற்றங்களின் விகிதமானது 2018 செப்டம்பரில் 0.5% அளவில் சீராக வீழ்ச்சியடைந்துள்ளது.