TNPSC Thervupettagam

இந்திய நிலக்கரி அமைப்பின் நிறுவன தினம் - நவம்பர் 1

November 5 , 2019 1790 days 460 0
  • இந்திய நிலக்கரி அமைப்பானது (Coal India Limited - CIL) நவம்பர் 1 ஆம் தேதியன்று தனது 45வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
  • இந்தக் கொண்டாட்டத்தின் போது, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷி இந்திய நிலக்கரி அமைப்பானது 2020-21 நிதியாண்டில் 750 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் என்றும் 2023 - 24 ஆம் நிதியாண்டில் அதற்கும் அதிகமாக ஒரு பில்லியன் டன் அளவிற்கு நிலக்கரியை உற்பத்தி செய்யும் என்றும் கூறினார்.
  • நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் 82% அளவிற்கு, அதாவது 660 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யக் கூடிய இலக்கானது தற்போது CIL நிறுவனத்திற்கு  வழங்கப் பட்டுள்ளது.
  • சமீபத்தில் மத்திய அரசானது நிலக்கரித் துறையில் நேரடி முறையின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்