TNPSC Thervupettagam

இந்திய பசுமைக் கட்டிடக் குழு சான்றிதழ்

September 17 , 2018 2266 days 681 0
  • இரயில் நிலையத்தில், பசுமைக் கட்டிட அம்சங்கள் மற்றும் கருத்தாக்கங்கங்களை பின்பற்றியமைக்காக ‘இந்திய பசுமை கட்டிடக் குழுவின் சான்றிதழை’ சென்னை சென்ட்ரல் இரயில் நிலையமானது பெற்றுள்ளது.
  • இதன் மூலம் தெற்கு இரயில்வேயில் பசுமைக் கட்டிடச் சான்றைப் பெற்ற முதல் இரயில் நிலையமாக மாறியுள்ளது.
  • சென்ட்ரல் இரயில் நிலையமானது பல பசுமை கட்டுமான அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில :
    • 100% எல்.இ.டி (LED) விளக்குகள்
    • 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற மின்விசிறிகள்
    • சூரிய சக்தி உபயோகம் மற்றும் சூரிய ஒளியிலான நீர் சூடேற்றும் கருவி
    • கழிவுப் பொருள்களை தரம் பிரித்தல் மற்றும் மறுசூழற்சி செய்தல்
  • இந்திய தொழில் கூட்டமைப்பால் (CII – Confederation of Indian Industry) நிறுவப்பட்ட இந்திய பசுமைக் கட்டிடக் குழுவானது (IGBC - Indian Green Building Council), 15 செப்டம்பர் 2018 அன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்ற ‘இரயில் ஸ்வச்சதா’ திட்டத்தின் போது இச்சான்றிதழை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்