சிங்கப்பூரில் நடைபெற்ற வணிகம், புத்தாக்கம், சமுதாயம் (Business, Innovation and Community Event) எனும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிம், ரூபே, SBI ஆகியவற்றின் செயலிகளை துவங்கி வைத்துள்ளார்.
இந்தியாவின் ரூபே டிஜிட்டல் பணசெலுத்தும் அமைப்பானது சிங்கப்பூரின் எலக்ட்ரானிக் பரிமாற்றத்திற்கான நெட்வொர்க்குடன் (Network for Electronic Transfers -NETS) இணைக்கப்படும்.
இதன் மூலம் ரூபே பயன்பாட்டாளர்கள் சிங்கப்பூர் முழுவதும் உள்ள NETS அமைப்பு ஏற்பு முனையங்களில் (NETS acceptance points) ரூபே-வை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் SBI வங்கியின் சிங்கப்பூர் கிளையின் புதிய செயலி அடிப்படையிலான ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டிலிருந்து பணம் செலுத்தும் வகையிலான செயலி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
NPCI உடன் கூட்டிணைந்து வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கான புதிய செயல் வகையை தொடங்கியுள்ள முதல் SBI கிளை சிங்கப்பூர் கிளையேயாகும்.