TNPSC Thervupettagam

இந்திய பணம் செலுத்து செயலிகள் - சிங்கப்பூர்

June 5 , 2018 2366 days 799 0
  • சிங்கப்பூரில் நடைபெற்ற வணிகம், புத்தாக்கம், சமுதாயம் (Business, Innovation and Community Event) எனும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிம், ரூபே, SBI ஆகியவற்றின் செயலிகளை துவங்கி வைத்துள்ளார்.
  • இந்தியாவின் ரூபே டிஜிட்டல் பணசெலுத்தும் அமைப்பானது சிங்கப்பூரின் எலக்ட்ரானிக் பரிமாற்றத்திற்கான நெட்வொர்க்குடன் (Network for Electronic Transfers -NETS) இணைக்கப்படும்.
  • இதன் மூலம் ரூபே பயன்பாட்டாளர்கள் சிங்கப்பூர் முழுவதும் உள்ள NETS அமைப்பு ஏற்பு முனையங்களில் (NETS acceptance points) ரூபே-வை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
  • மேலும் இந்த நிகழ்ச்சியில் SBI வங்கியின் சிங்கப்பூர் கிளையின் புதிய செயலி அடிப்படையிலான ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டிலிருந்து பணம் செலுத்தும் வகையிலான செயலி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
  • NPCI உடன் கூட்டிணைந்து வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கான புதிய செயல் வகையை தொடங்கியுள்ள முதல் SBI கிளை சிங்கப்பூர் கிளையேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்