TNPSC Thervupettagam

இந்திய பத்திரிக்கை கழகத்தின் தலைவர்

May 25 , 2018 2278 days 677 0
  • மத்திய அரசு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி K.பிரசாத் அவர்களை இந்திய பத்திரிக்கை கழகத்தின் (Press Council of India - PCI) தலைவராக நியமித்துள்ளது. இது அவருடைய இரண்டாவது பணிக்காலமாகும்.
  • இவருடைய நியமனத்திற்கு, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை தலைவராகக் கொண்ட மூன்று நபர் குழுவினால் அனுமதியளிக்கப்பட்டது.

  • இவர், இதற்கு முன்னர் தலைவராக இருந்த நீதிபதி மார்கண்டேய கட்ஜீ பதவி விலவிய பிறகு நவம்பர் 2014ல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • சட்டப்பூர்வ அங்கமான PCI, அச்சு ஊடகங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு கண்காணிப்பு அமைப்பாக செயல்படுவதற்கான கடமையைக் கொண்டுள்ளது. PCI யின் கடமைகள் பத்திரிக்கை கழகச் சட்டம் 1978ல் கொடுக்கப்பட்டுள்ளன.
  • சட்டப்பூர்வமான, நீதித் துறையைப் போன்ற அதிகாரமுடைய (Quasi-Judicial) அங்கமான PCI, அச்சு ஊடகங்களுக்கான கண்காணிப்பு அமைப்பாக செயல்படுகிறது.
  • இவ்வமைப்பு (PCI), ஒரு தலைவர் மற்றும் 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் தலைவர் வழக்கமாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாவார்.
  • 28 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் ஊடகங்களின் பிரதிநிதிகள் ஆவார். ஐந்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் நியமிக்கப்படுகின்றனர். மற்ற மூன்று உறுப்பினர்கள் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் சட்டத் துறைகளைச் சேர்ந்தவர்களாவர்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்