பாதுகாப்பு முக்கியத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனம் (International Institute for Strategic Studies) வெளியிட்டுள்ள “இராணுவ சமநிலை - 2018“ (Militry Balance 2018) அறிக்கைப்படி, இந்திய இராணுவத்தின் பட்ஜெட்டானது உலகின் ஐந்தாவது பெரிய இராணுவ பட்ஜெட்டாக பட்டியலிடப்பட்டுள்ளது.
முதல்முறையாக இங்கிலாந்தின் இராணுவ பட்ஜெட்டை இந்திய இராணுவ பட்ஜெட் முந்தியுள்ளது.
இந்தியாவின் இராணுவ பட்ஜெட் ஒதுக்கீடானது5 பில்லியனாகும்.
இந்த அறிக்கைப்படி இந்தியாவின் பட்ஜெட்டைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமான பட்ஜெட் ஒதுக்கீடாக 5 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டு சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
8 பில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்கா இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது.
சவுதி அரேபியா மற்றும் இரஷ்யா ஆகியன முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.