இந்தியாவில் முதன்முறையாக, மத்தியக் கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனமானது (Central Marine Fisheries Research Institute - CMFRI) இந்திய பொம்பனோ மீன்களை குளங்களில் வளர்க்க ஒரு சாத்தியமான அறிவியல் முறையை உருவாக்கியுள்ளது.
பொம்பனோ மீன்கள் கடல் மீன் வகை இனத்தைச் சேர்ந்தவையாகும்.
இந்திய அரசு பொம்பனோ மீன் குறித்த அறிவியல் ஆய்வை 2014 ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்தத் திட்டத்திற்கு நிதியுதவியானது தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தினால் (National Fisheries Development Board - NFDB) வழங்கப் பட்டுள்ளது.
இறால்களுடன் பொம்பனோவை வளர்ப்பது இறால்களின் உயிர்வாழ்வு விகிதத்தை அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இறால்களைத் தாக்கும் வைரஸ்களின் வாழ்க்கைச் சுழற்சியை பொம்பனோ மீன்கள் உடைக்கின்றன.
இறால் மற்றும் பொம்பனோ ஆகியவற்றின் ஊடு வளர்ப்பைச் செயல்படுத்த மத்திய அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது.