TNPSC Thervupettagam

இந்திய மகளிர் இயற்கை வேளாண்மை திருவிழா

October 19 , 2017 2594 days 922 0
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய மகளிர் இயற்கை  வேளாண்மை திருவிழா வெற்றிகரமாக அக்டோபர் 15 அன்று நிறைவடைந்தது.
  • பெண் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை பொருட்களின் பெரும் திருவிழாவாக புதுதில்லியிலுள்ள தில்லி ஹாட் பகுதியில் நடத்தப்பட்டது.
  • இயற்கை உணவு மற்றும் நறுமணப் பொருட்கள், சமையலறை பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் போன்றவை உள்ளடங்கிய பல இயற்கை பொருட்களின் விற்பனைக்கான இடமாக இந்திய மகளிர் இயற்கை வேளாண்மை திருவிழா தற்போது வருடாந்திர நிகழ்ச்சியாக உருவாகியுள்ளது.
  • இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பெண்கள் மற்றும் பெண் குழுக்களுக்கு ஆதரவு அளித்தல் ,அவ்வாறு அவர்களின் உள்ளூர் சமுதாய பொருளாதாரத்திற்கு ஆதரவளித்தல் மூலம் வேலைவாய்ப்பை உண்டாக்குதல், விவசாயிகளின் வளர்ச்சியை தொடர வைத்தல். அதோடு இயற்கை பொருட்களின் நன்மையினைப் பற்றி சரியான விழிப்புணர்வை பரப்புதல் போன்றவையாகும்.
  • மகளிர் தொழிற்முனைவோர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை சந்திக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இணையத் தொடக்கமான மஹிளா-இ.ஹாத் மூலம் பெண் பங்கேற்பாளர்கள் இந்திய மகளிர் இயற்கை வேளாண் பொருட்கள் திருவிழாவிற்கு பதிவு செய்ய இயலும். இந்த தனித்தன்மை வாய்ந்த இணைய தளமானது திருவிழாவிற்கு அப்பாலும் பெண் தொழில் முனைவோர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை வேகமாக வலுப்படுத்த உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்