2022 ஆம் ஆண்டு மகளிருக்கான ஹாக்கி உலகக் கோப்பை மற்றும் 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு இந்திய கோல்கீப்பர் சவிதா புனியா அணித் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
நீண்ட காலம் இந்திய அணித் தலைவராகப் பணியாற்றிய ராணி ராம்பால் இந்தப் போட்டிகளின் போது பங்கேற்கமாட்டார்.
டீப் கிரேஸ் எக்கா இந்திய அணியின் துணைத் தலைவராக செயல்படுவார்.
2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் ஜூலை 28 ஆம் தேதி தொடங்க உள்ளது.
15வது FIH மகளிருக்கான ஹாக்கி உலகக் கோப்பை 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இது சர்வதேச ஹாக்கிக் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.