இந்திய மாநிலங்கள் பற்றிய புள்ளிவிவரங்களின் கையேடு 2023-24
December 15 , 2024
7 days
77
- இந்திய ரிசர்வ் வங்கியானது, 2023-24 ஆம் ஆண்டிற்கான இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரக் கையேட்டின் சமீபத்திய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
- இது மக்கள்தொகை, சுகாதாரம் மற்றும் பொருளாதாரக் குறிகாட்டிகள் பற்றிய பல முக்கியத் தகவல்களை உள்ளடக்கியது.
- இந்தத் தரவு ஆனது, 1951 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டங்களில் சேகரிக்கப் பட்டுள்ளதோடு இது பகுப்பாய்விற்கான பதிவுகளை வழங்குகிறது.
- சுமார் 35.24 லட்சம் கோடி ரூபாய் மாநில உள்நாட்டு உற்பத்தியுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
- இதர மற்றப் பங்களிப்பாளர்களில் தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை அடங்கும்.
- கேரளாவில் அதிக கிராமப்புற ஊதியம் வழங்கப்படுகிற ஒரு நிலையில் இது தேசியச் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
- கேரளாவில் ஓர் ஆண் கட்டுமானத் தொழிலாளி ஒரு நாளைக்கு சுமார் 894 ஊதியம் பெறுகிறார்.
- ஆனால் மத்தியப் பிரதேசத்தில் ஒரு நாளைக்கு சுமார் 292 ரூபாய் என்ற மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் படுகிறது.
- கேரளாவின் கட்டுமானப் பணிகளுக்கான கூலி மத்தியப் பிரதேசத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
Post Views:
77