TNPSC Thervupettagam

இந்திய முதுமை அறிக்கை 2023

June 23 , 2024 7 days 131 0
  • 'இந்தியாவில் முதுமை – தயார்நிலையினை ஆராய்தல் மற்றும் பராமரிப்பு சவால்களுக்கான எதிரான நடவடிக்கை - ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற அமைப்பின் அறிக்கை' என்ற தலைப்பிலான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • சுமார் 29% முதியோர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நிதி உதவி பெறுகின்றனர் என்ற நிலையில் ஆண்களை விட முதுமகளிர்களுக்கு நிதி உதவி பெறுவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது.
  • முதியோர்களின் எண்ணிக்கையானது நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆண்டிற்கு 3% அதிகரிப்புடன் 319 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆயிரம் ஆண்களுக்கு 1,065 பெண்கள் என்ற பாலின விகிதத்தில் இந்த மதிப்பீடு பெண் பாலினம் சார்ந்ததாக இருக்கும்; மேலும், வயது முதிர்ந்த பெண்களில் சுமார் 54% பேர் கைம்பெண்களாக இருப்பார்கள்.
  • வயது முதிர்ந்த ஆண்களில் 6% பேர் தனியாக வாழ்கின்றனர் ஆனால் பெண்களில் இது 9% ஆக உள்ளது என்பதோடு அவர்களில் 70% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
  • 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 6% பேர் மிகக் குறைந்த அளவில் உணவு உண்டோ அல்லது உணவைத் தவிர்த்தோ வாழ்வதால் இந்தியாவின் முதியவர்களிடையே உணவுப் பாதுகாப்பின்மை நிலவுகிறது.
  • அவர்களில் 5.3% பேர் பட்டினி நிலையில் இருந்தாலும் உணவு உண்பதில்லை.
  • முதியவர்களில் 75% பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 40% பேர் ஒன்று அல்லது மற்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்