TNPSC Thervupettagam

இந்திய மூளை வார்ப்புருக்கள்

September 18 , 2020 1440 days 611 0
  • தேசிய மன நலம் மற்றும் நரம்பு அறிவியல் மையத்தை (NIMHANS - National Institute of Mental Health and Neuro Sciences) சேர்ந்த நரம்பியல் வல்லுநர்களைக் கொண்ட ஆராய்ச்சிக் குழுவானது இந்திய மூளை வார்ப்புருக்கள் (IBT - Indian Brain Templates) மற்றும் மூளை வரைபடத்தை மேம்படுத்தியுள்ளது.
  • இது நோய்வாய்ப்பட்ட நிலையில் மூளையின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்காக பல்வேறு மூளைப் படங்களிலிருந்துப் பெறப்படும் ஒரு ஒட்டு மொத்தப் பிரதிநிதித்துவமாகும்.
  • இந்தப் புதிய மக்கள் தொகை மற்றும் வயது தொடர்பான IBT ஆனது மூளை வளர்ச்சி மற்றும் வயது ஆகியவற்றை மிகத் துல்லியமான வகையில் கண்டறிய அனுமதிக்கும்.
  • இந்த வார்ப்புருக்கள் மற்றும் வரைபடமானது பக்கவாதம், மூளைக்கட்டி மற்றும் மனச்சோர்வினால் ஏற்படும் நோய் (டிமென்டியா) போன்ற நரம்பு மண்டலப் பிரச்சினைகளுடன் இருக்கும் தனிப்பட்ட நோயாளிகளின் விருப்பப் பகுதிகளுக்கான எளிதான குறிப்பு வரைபடங்களை அளிக்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்