TNPSC Thervupettagam

இந்திய ரயில்வேயின் புதிய ஹெட் ஆன் ஜெனரேஷன் தொழில்நுட்பம்

December 12 , 2019 1812 days 595 0
  • இந்திய ரயில்வேயானது புதிய ஹெட் ஆன் ஜெனரேஷன் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது இரைச்சல் மற்றும் காற்று மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்கு வேண்டி  பயணிகள் ரயில்களில் செயல்படுத்தப் படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் ஆற்றல் திறனுள்ள ஒரு தீர்வாகும்.
  • இந்திய ரயில்வேயானது மின்சார என்ஜின்களில் பொருத்தப்பட வேண்டிய மாற்றிகளை உருவாக்கி, அதனை மேம்படுத்தியுள்ளது.
  • இந்த மாற்றிகள் டீசல் மின்னாக்கிகளையும் மாற்றும் திறன் கொண்டது.
  • இந்த மாற்றிகள் என்ஜின்களை ஹெட் - ஆன் ஜெனரேஷன் தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாக ஆக்குகின்றன.
  • அதிக சத்தம் (இரைச்சல்) ஏற்படுத்தும் புகை உமிழும் ஆற்றல் மின்னாக்கிகள் சத்தமற்ற மின்னாக்கிகளால் மாற்றப்பட இருக்கின்றன.
  • இந்தத் தொழில்நுட்பத்தை ஜெர்மனியானது இந்திய ரயில்பெட்டித் தொழிற் சாலைகளுக்கு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்