இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர்ப் படையின் பங்களிப்பை இந்த நாள் நன்கு அங்கீகரிக்கிறது.
1947 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில், ஜம்மு காஷ்மீரின் மகாராஜா ஹரி சிங், இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி, இந்திய இராணுவத்தின் முதல் துருப்புக்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிப் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்பட்ட ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டு பின்வாங்கும்படி செய்தது.