TNPSC Thervupettagam

இந்திய ராணுவம்– புதிய உலக சாதனை

November 19 , 2017 2590 days 1031 0
  • பெங்களூரூவின், எலஹங்காவில் உள்ள இந்திய விமானப் படைத்தளத்தில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் இந்திய இராணுவ சேவைப் படைப்பிரிவை (ASC – Army Service Corps) சேர்ந்த ” டோர்னாடோஸ் “ (Tornadoes) என்ற மோட்டார் சைக்கிள் சாகச அணியினர் புதிய உலகச் சாதனையைப் படைத்துள்ளனர்.
  • 500 CC திறன் கொண்ட ராயல்டு என்பீல்டு மோட்டார் சைக்கிளில் 58 பேர் கொண்ட இக்குழுவினர் 1200 மீட்டர் பயணித்து சாதனைப் புரிந்துள்ளனர்.
  • இந்த டோர்னாடோஸ் படையினர் இதற்குமுன் இந்திய இராணுவத்தின் டேர்டெவில்ஸ் எனும் இந்திய சமிக்ஞை படையினரால் ஒரே மோட்டார் சைக்கிளில் 56 பேர் பயணித்து நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளனர்.
  • இந்த டோர்னாடோஸ் அணி 1982-ல் கர்னல். N. ராவ் மற்றும் கேப்டன் J.P. வர்மா தலைமையில் உருவாக்கப்பட்டது.
  • இதுவரை இந்த அணி மொத்தம் 19 உலக  மற்றும் தேசிய சாதனைகளைப் படைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்