TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் 5 பில்லியன் டாலர் ரூபாய் மதிப்புமாற்று ஏலம்

February 4 , 2025 19 days 74 0
  • இந்த மதிப்புமாற்று ஏலம் ஆனது, வங்கி அமைப்பில் சுமார் 1.50 லட்சம் கோடி ரூபாய் அளவில் ரூபாய் மதிப்பிலானப் பணப்புழக்கத்தினை உட்செலுத்துவதற்கான மத்திய வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது அறிவிக்கப்பட்ட 5 பில்லியன் டாலர் தொகைக்கு எதிராக, ஏலத்தில் 253 பங்கேற்பாளர்களிடமிருந்து சுமார் 25.59 பில்லியன் டாலர் மதிப்பில் ஏல கோரிக்கைகளைப் பெற்றது.
  • இதில் ஏலத்தினைக் கைப்பற்றிய ஏலதாரர்களின் நடப்புக் கணக்குகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பிலான நிதியை வரவு வைக்கும்.
  • இப்பரிமாற்றப் பரிவர்த்தனையின் மறுபகுதியில், அமெரிக்க டாலர்களைத் திரும்பப் பெறுவதற்காக வேண்டி ஆறு மாதங்களுக்குப் பிறகு ரூபாய் மதிப்பிலான நிதிகள் மதிப்பு மாற்றத் தவணைகளுடன் இந்திய ரிசர்வ் வங்கிக்குத் திருப்பி அனுப்பப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்