மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்திய ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டு நிறைவின் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு, தனியாருக்குச் சொந்தமான நிறுவனமாக 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது.
இது 1949 ஆம் ஆண்டில் 1948 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (அரசு உரிமத்திற்கு மாற்றம்) சட்டம் மூலம் தேசியமயமாக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் சர் ஆஸ்போர்ன் ஸ்மித் ஆவார்.
சர் C.D. தேஷ்முக் முதல் இந்திய ஆளுநர் ஆவார்.
ஒரு ரூபாய் தாள்கள் மற்றும் நாணயங்களைத் தவிர மற்ற இந்தியப் பணத்தாள்களை வெளியிடுவதற்கும் மேலாண்மை செய்வதற்குமான பொறுப்பினை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.