TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் 90வது ஸ்தாபன தினம்

April 6 , 2024 104 days 176 0
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆனது 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.
  • இது நிதி உறுதித் தன்மை, நாணய மேலாண்மை, பணவீக்க இலக்கு நிர்ணயித்தல், வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வட்டி விகிதங்களை நிர்ணயித்தல் ஆகியவற்றிற்கான பொறுப்பினை வகிக்கும் நிறுவனம் ஆகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியை நிறுவுவதற்கான சட்டம் ஆனது 1934 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்றப்பட்டது.
  • வங்கியை நிறுவுவதற்கான விதிமுறைகள், பங்கு மூலதனம் வெளியீடு மற்றும் மத்திய மற்றும் உள்ளூர் வாரியங்களை நிறுவுதல் தொடர்பான விதிகள் 1935 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் இம்பீரியல் வங்கியின் இரண்டு நிர்வாக ஆளுநர்களில் ஒருவரும் ஆஸ்திரேலிய நாட்டவருமான சர் ஆஸ்போர்ன் ஆர்கெல் ஸ்மித் என்பவர் ஆவார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான முதல் இந்தியர் சர் C. D. தேஷ்முக் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்