இந்திய ரிசர்வ் வங்கியின் அமைப்புசார் இடர் ஆய்வின் 23வது சுற்று ஆனது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் தனது அறிக்கையை வெளியிட்டது.
உலகளாவியத் தாக்கப் பரவல், நிதிச் சந்தை மற்றும் பொதுவான அபாயங்கள் அதிகரித்துள்ளன எனவும், அதே சமயம் பேரியல் பொருளாதாரம் சார்ந்த இடர்கள் மிதமானதாக உள்ளது எனவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வின்படி, கடந்த ஆறு மாதங்களில் உலக நிதி அமைப்பின் நிலைத்தன்மை மீதான நம்பிக்கையானது ஓரளவு குறைந்துள்ளது.
இதற்கு நேர்மாறாக, ஆய்வில் பங்கேற்ற 93.6 சதவீத பங்கேற்பாளர்களின் கூற்றுப்படி இந்திய நிதி அமைப்பு மீதான நம்பிக்கை மேலும் மேம்பட்டுள்ளது.